கொலைகாரனை கண்டு பிடியுங்கள் பரிசுகளை அள்ளுங்கள் கொலைகாரன் படக்குழுவின் மாபெரும் புதிர் போட்டி
நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வரும் படம் “கொலைகாரன் “. இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிகர் அர்ஜுன் நடித்து வருகிறார். இந்த படத்தை தீய மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்க ,ஆண்ட்ரூ லூயிஸ் டைரக்டு செய்கிறார்.
கொலைகாரன் படக்குழு தற்போது ஒரு பரிசு போட்டியை அறிவித்துள்ளது. ஏப்ரல் 19 லிருந்து 24 ந் தேதி வரைக்கும் கொலைகாரன் படக்குழுவின் போஸ்டர்கள் வெளியாகும். அந்த போஸ்டர்களில் கொலைகாரன் யார் என்பதை பற்றிய சிறு சிறு துப்புகள் கொடுக்க பட்டிருக்கும் எனவும் எனவே கொலைகாரனின் பெயரை வரும் 24 தேதிக்குள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த படத்தின் கொலைகாரன் ரோலை கண்டுபிடிக்கும் 4 பேருக்கு ஃபாஸ்ட்டிராக் வாட்ச் பரிசாக வழங்க பட இருக்கிறது. விஜய் அண்டனியுடன் பிரீமியர் ஷோ பார்ப்பதற்கு 100 டிக்கெட்டுகள் வழங்கபடும் படக்குழு அறிவித்துள்ளது.