சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் அமமுகவின் தலைவராக இருப்பார் – தங்க தமிழ்ச்செல்வன்
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் அமமுகவின் தலைவராக இருப்பார் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் பதவி ஏற்றார்.சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஒருமனதாக தேர்வானார்.
இந்நிலையில் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் அமமுகவின் தலைவராக இருப்பார். அமமுகவின் துணைத்தலைவர் தேர்வு விரைவில் நடைபெறும். 4தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.