சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

Default Image

குடிநீர் வடிகால் வாரிய சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் தென்மண்டல செயலாளர்கள் ராமநாதன், சிவசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்பட மொத்தம் 33 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இதில் 37 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இவர்கள் மேற்பார்வையில் மோட்டார் இயக்குனர்கள், பழுது பார்ப்பவர்கள், குடிநீர் குழாய் உடைப்பை பழுது பார்க்கும் ஆட்கள் என மொத்தம் 27 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக 2 மாவட்டத்திலும் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய் தொகை ரூ.17 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. இந்த பணத்தை வருகிற 30–ந்தேதிக்குள் தரவில்லை என்றால் எங்களால் வேலை ஆட்களுக்கு சம்பளம் தர முடியாத நிலை ஏற்படும். அத்துடன் குடிநீர் வினியோகமும் தடைபடும் நிலை ஏற்படும்.

எனவே உடனடியாக பாக்கி தொகை ரூ.17 கோடியை வழங்க வேண்டும். இல்லையென்றால் வருகிற ஜனவரி 7–ந்தேதி முதல் மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து உண்ணாவிரத போராட்டம நடத்தவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்