ஸ்ரீ ரெட்டியின் போராட்டத்திற்கு முற்று புள்ளி வைத்து அரசு எடுத்த அதிரடி முடிவு
நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பல இயக்குநர்கள் நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை அடுக்கி அவர்களை மீது நடவடிக்கை எடுக்குமாறு போராட்டங்களை நடத்தினார். அதற்கு பிறகு தொடர்ந்து பல நடிகைகளும் பாலியல் குற்றச்சாட்டுகளை பல இயக்குனர்கள் மீதும் கூறினார்கள்.அவர்களுக்கும் ஆதரவாக அவர் குரல் கொடுத்து வந்தார். ஆந்திர அரசு நடிகை ஸ்ரீரெட்டியின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது.
இதற்கு தற்போது தெலுங்கானா திரைபட அபிவிருத்தி கார்ப்பரேஷன் தலைவர் ராம மோகன் ராவ் தலைமையில் ஒரு குழு அமைத்து நடிகைகளின் குறைகளை தீர்க்கும் மையம் அமைத்துள்ளது.எனவே நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது ஆந்திர அரசுக்கு நன்றி செலுத்தி என்னுடைய கனவுகள் நிறைவேறியது என்று கூறியுள்ளார்.