திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அதிமுக புகார்
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும் மிக தீவிரமாகவும், உற்சாகமாகவும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தயாநிதிமாறன் ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்த பின், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர். இதனையடுத்து, ஓட்டு போட்டுவிட்டு விதிமுறைகளை மீறி திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோர் பேட்டியளித்ததாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்துள்ளார்.