தேர்தல் ரத்து !அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது-அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று  நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து இடங்களிலும் தீவிரமாக சோதனை நடைபெற்றது.

குறிப்பாக வேலூரில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,   வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், குறிப்பிட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கோரியது .ஆனால் தேர்தலை ரத்து செய்துள்ளது, அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது.இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கருத்து கேட்காமல் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்