முன்னணி நகைக்கடையுடன் கூட்டணி சேர்ந்த லேடி சூப்பர்ஸ்டார்
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாட பட்டு வருகிறார்.இந்நிலையில் இவர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிவருகிறார் மற்றும் இவரின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.
இந்நிலையில் இவர் ‘தனிஷ்க்’ நகை கடையின் விளம்பர தூதராக நியமிக்கபட்டுள்ளார். இதையடுத்து இவர் அட்சய திருதியை முதல் நாள் அன்று ‘தனிஷ்க்’ நகைக்கடையின் அனைத்து விளம்பரங்கள், பிரசாரங்கள், பத்திரிகை விளம்பரங்கள், வெளி விளம்பரங்கள் ஆகியவற்றில் இடம் பெறுவார் என்று அறிவிக்கபட்டுள்ளது.