வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி ஏ.சி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் முறையீடு
நாளை தமிழகத்தில் 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.
கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வேலூர் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கு தடையில்லை என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளார்.
காலை 10.30 மணிக்கு மேல் அவசர வழக்காக விசாரணை.இந்த வழக்கை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு விசாரணை செய்ய உள்ளனர்.