திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை!2 மணி நேரமாக நடைபெற்ற சோதனை
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். தனியார் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக மூட்டைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தேர்தலில் சமயத்தில் முக்கிய பிரமுகர்களின் வீட்டில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.தூத்துக்குடி குறிஞ்சிநகர் பகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கிறார்.அவர் தங்கியிருந்த வீட்டில் 2 மணி நேரமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.பின்னர் அந்த சோதனை நடைபெற்றது.