மீண்டும் மும்பையிடம் பரிதாப தோல்வி அடைந்த பெங்களூர்!! கோலி சோகமழை!
மும்பையிடம் தொடர்ந்து இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளது பெங்களூர் அணி.
மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன்படி பெங்களூர் அணி வீரர்கள் களம் இறங்கினார்.
அந்த அணியின் பார்த்தீவ் பட்டேல் 20 பந்துகளுக்கு 28 ரன்னில் விராட் கோலி 8 ரன்களிலும் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து ஆடிய ஏபி டி வில்லியர்ஸ் 51 பந்துகளுக்கு 75 ரன்களும் மொயீன் அலி 32 பந்துகளில் 50 ரன்கள் விளாச 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 171 ரன் விளாசி உள்ளது. மும்பை அணியின் சார்பில் லஷித் மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 172 என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய அந்த அணியின் துவக்க வீரர் குவின்டன் டி காக் 26 பந்துகளில் 40 ரன் குவித்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஓரளவிற்கு அதிரடியாக ஆடி விட்டு செல்ல இறுதியாக வந்த ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 36 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும் .இதன் மூலம் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் விளாசி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை அணி.