வண்டலூர் பூங்கா ஏப்ரல் 18-ம் தேதி செயல்படாது
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலை முன்னிட்டு, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஏப்ரல் 18-ம் தேதி விடுமுறை விடப்படுவதாக பூங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் பொதுவிடுமுறை தினம் என்பதால், அன்றைய தினம் பூங்கா செயல்படாது என பூங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.