பாலிவுட்டில் கால் பதிக்கும் பிரணிதா
கோலிவுட் சினிமாவில் பிரணிதா “சகுனி” மற்றும் “மாஸ்” முதலிய திரை படங்களில் நடித்து பிரபலமானார். இவர் கன்னட சினிமாவிலும் தற்போது மிக சிறந்த நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் பாலிவுட்டில் ‘புஜ்’ எனும் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறாராம். இந்த படம் 1971 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் நடை பெற்ற போரை மையமாக வைத்து உருவாக இருக்கிறது.