KXIP VS RCB: இன்றாவது தனது முதல் வெற்றியை பெறுமா கோலியின் பெங்களூர்! புள்ளிவிவரம் சொல்வதென்ன?

Default Image

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்று நடக்க உள்ளது. தற்போது வரை பெங்களூர் அணி 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 போட்டியில் விளையாடி நான்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டி  கிங்ஸ் லெவன் அணிக்கு முக்கியமான போட்டியாகும். ஏனெனில் புள்ளி பட்டியலில் அவர்களுக்கு முதல் நான்கு இடத்திற்குள் வர வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் பெங்களூரு அணிக்கு அப்படியில்லை.6 போட்டிகளில் தோற்று எப்படியாவது முதல் போட்டியில் வெற்றி பெற்ற வரவேண்டும் என்று இன்று களமிறங்கவுள்ளனர்.

KXIP Vs RCB நேருக்கு நேர் 

  • விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை: 22
  • KXIP: 12 போட்டிகளில் வெற்றி பெற்றது
  • RCB வென்ற போட்டிகள்: 10
  • மொஹாலியில் விளையாடிய போட்டிகள்: 6 (KXIP 3, RCB 3)
  • பெங்களூரில் விளையாடிய போட்டிகள்: 10 (KXIP 5, RCB 5)
  • RCB க்கு எதிராக KXIP சராசரி ரன்: 153
  • KXIP க்கு எதிராக RCB சராசரி ரன்: 159
  • KXIP க்கான அதிக ரன்கள்: 227 (டேவிட் மில்லர்)
  • RCB க்கு அதிக ரன்கள்: 552 (விராத் கோலி)
  • KXIP க்கான அதிக விக்கெட்: 2 (ரவிச்சந்திரன் அஸ்வின்)
  • RCB க்கு அதிக விக்கெட்: 17 (யூசுவெந்திர சஹால்)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்