ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா?
கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சுவை ராஜஸ்தானில் போலீசார் கைது செய்தனர்.
ஆனால் இதற்கு முன்பு இந்த சம்பவம் தொடர்பாக சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது. கொள்ளையர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டின்போது பெரியபாண்டியை தவறுதலாக சுட்டார் எனவும் அஜாக்கிரதையாக செயல்பட்டு பெரியபாண்டி உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக எப்.ஐ.ஆரை ராஜஸ்தான் காவல்துறையால் பதியப்பட்டுள்ளது.