நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்லக்கூடியவர்கள் அல்ல – மு.க.ஸ்டாலின்
நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்லக்கூடியவர்கள் அல்ல என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அப்போது அவர் பேசுகையில், நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்லக்கூடியவர்கள் அல்ல, நாங்கள் எப்போதும் மக்களோடு, மக்களாக இருப்பவர்கள்.
திருச்சியில் திமுகவை பொறுத்தவரை போட்டிக்கு நாள் குறித்தாலே, அது வெற்றிக்கு நாள் குறித்தது போலத்தான்.அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.