கணவரின் பிறந்தநாள் அன்று ஒரு சிறப்பு பரிசினை கொடுத்து அசத்திய சூப்பர்சிங்கர் புகழ் ராஜலஷ்மி
ஆர்மோனியத்தை வாங்கி பிரபல இசை அமைப்பாளரிடம் கையெழுத்து வாங்கி செந்தில் கணேஷிற்கு ராஜலஷ்மி பரிசாக கொடுத்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் இசை நிகழ்ச்சி “சூப்பர் சிங்கர்”.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜோடி செந்தில் ராஜலஷ்மி.
இந்நிலையில் இவர்கள் தற்போது படத்திலும் படும் வாய்ப்புகள் கிடைத்து படி வருகிறார்கள். இந்நிலையில் ராஜலஷ்மி அவரது கணவர் செந்தில் கணேஷின் பிறந்த நாள் அன்று ஒரு ஆர்மோனியத்தை வாங்கி அதில் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கையொப்பம் வாங்கி கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது அவர்கள் இருவரின் நீண்ட நாள் ஆசையாம். தற்போது நிறைவேறியுள்ளதை அடுத்து மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.