தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
இன்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க- பா.ம.க.-தே.மு.தி.க- த.மா.கா- புதிய தமிழகம் – புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றது.மேலும் இந்த கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கப்படுகிறது.
இன்று இரவு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.
பின் நாளை (ஏப்ரல் 13 ஆம் தேதி) தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி ஆதரித்து உரையாற்ற உள்ளார்.அதேபோல் இதன் பின் ராமநாதபுரம் சென்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி ஆதரித்து உரையாற்றுகிறார்.
இதனால் அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.இதில் ஈரோடு ,திருப்பூர் ,கோவை ,நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி ஆதரித்து உரை நிகழ்த்துகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வருவதையொட்டி மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.