கஸ்தூரி நடிச்ச மாதிரி நான் எந்த படத்திலும் ஆபாசமாக நடிக்கவில்லை பிரபல நடிகை பதிலடி
கஸ்தூரி நடிச்ச மாதிரி நான் எந்த படத்திலும் ஆபாசமாக நடிக்கவில்லை என நடிகை லதாபதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு பலரின் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். இதையடுத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பற்றி ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “எம்.ஜி ஆர் பல்லாண்டு வாழ்க படத்தில் நடிகை லதாவை தடவியது போல் தடவுறாங்க ” எனும் கருத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
இதற்கு தற்போது நடிகை லதா தற்போது தக்க பதிலடி கொடுத்துள்ளார்.முதலில் லதா கஸ்தூரியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கஸ்தூரி நடிச்ச மாதிரி நான் எந்த படத்திலும் ஆபாசமாக நடிக்கவில்லை.நான் தமிழ் சினிமாவில் எனக்கென்று ஒரு பெயரை தக்க வைத்துள்ளேன் என்று கூறினார்.
மேலும் அவர் கஸ்தூரிக்கு கருத்து சொல்ல ஏதும் விஷயம் தேவைப்பட்டால் அவர் நடித்த படங்களையே உதாரணம் சொல்லாமே. ஒரு பெண் இன்னொரு பெண்ணை அவமானபடுத்துவது சரியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இவ்வாறு கஸ்தூரி பேசியதற்கு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தற்போது கடுமையாக தகளது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.