கொள்கை அல்ல, கொள்ளை மட்டுமே நோக்கம் : அமைச்சர் செல்லூர் ராஜு
- மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க. அரசு சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டு வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், வெற்றி பெற போவதில்லை என்று தெரிந்தும் காங்கிரசும், தி.மு.க.வும் பொய்யுரைகளை அவிழ்த்து விடுகின்றனர் என்றும், கொள்கைக்காக காங்கிரசும், தி.மு.க.வும் இணையவில்லை. கொள்ளை அடிப்பதற்காக இணைந்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அமைத்து இருக்கும் கூட்டணி ஒரு பிணி அவர்களை விமர்சித்துள்ளார்.