ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு தக்க தண்டனை அளிக்கப்படும் : மு.க.ஸ்டாலின்
- தூத்துக்குடியில், அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டு கொலை செய்த, அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து, புதுக்கோட்டை அருகே மங்களகிரி விலக்கில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடியில், அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டு கொலை செய்த, அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ள, எடப்பாடி அரசு கொலைகார அரசாக இருப்பதால், அவர்களை தூக்கி எறிய வருகிற 18-ம் தேதியை நீங்கள் பயன்படுத்திட வேண்டும். மேலும் அவர் பேசுகையில், தூத்துக்குடி விமான நிலையத்தில், பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்ட மாணவி சோபியாவை கைது செய்ய கூறிய தமிழிசை குறித்து அவர் பேசியுள்ளார்.