47 குழந்தைகளுக்கு தந்தையான கணவர், அதிர்ச்சியில் மனைவி

  • பிரித்தானியாவில் ஒருவர் 47 குழந்தைகளுக்கு தந்தையாகி இருப்பதை கேள்விப்பட்ட மனைவி அதிர்ச்சியில் உரைத்தார்.

ரெடிக் என்னும் அமெரிக்க இணையதளத்தில், பொதுமக்கள் தங்களது குழப்பமான சூழ்நிலைகளையம், பிரச்சனைகளையும் பதிவிட்டு வருகின்றனர். மக்கள் பதிவிடும் இந்த கருத்துக்களுக்கு பலரும் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருவது வழக்கம்.

இந்நிலையில், அந்த இணையதளப் பக்கத்தில் ஒரு பெண் தனது பிரச்சனையை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, 47 வயதாகும் அவரின் கணவருடன் 8 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறாராம். அவருக்கு ஒரு குழந்தை உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அவரது கணவர் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பதாக விந்தணுக்களை தானம் செய்துள்ளதாக அவரிடம் கூறியுள்ளார். அவர் கூறியவுடன் அவருக்கு 1 அல்லது 2 குழந்தைகள் தான் இருக்கும் என்று எண்ணியுள்ளார். அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

விந்தணுக்கள் தானத்தின் மூலம் எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன என்று தனது கணவரிடம் கேட்டுள்ளார். கடைசியாக கருத்தரிப்பு மையம் கூறிய கணக்கின்படி 47 குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனை கேட்ட அவரது மனைவி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். மேலும், பிரித்தானியா சட்டப்படி, 18 வயதை அடைந்த பின்பு அந்த குழந்தைகளுக்கு குழந்தைகளின் உயிரியல் தந்தை யாரென்று தெரியப்படுத்த வேண்டும். இந்நிலையில் எதிர்காலத்தில் அந்த குழந்தைகள் தேடி வந்தால் என் நிலை என்ன ஆகும் என்றும், மேலும் அவர் அவரை விவாகரத்து செய்வதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் அந்த பதிவில் கூறியுள்ளார்.

Leave a Comment