இன்று (ஏப்ரல் 11) 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு?

Default Image

இன்று  (ஏப்ரல் 11-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாள் உங்களுக்கு இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் நாள் ஆகும்.

ரிஷப ராசிக்காரர்கள்:   

Image result for ரிஷப ராசி logoஇன்றைய நாள் உங்களுக்கு  உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில்  முன்னேற்றம் ஏற்படும். உடல் உபாதைகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும் நாள் ஆகும்.

மிதுன ராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

இன்றைய நாள் உங்களுக்கு மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும் நாள் ஆகும்.

கடக ராசிக்காரர்கள்:  

Image result for கடக ராசி

இன்றைய நாளில்  உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்  நாள் ஆகும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி

இன்றைய நாளில் நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும் நாள் ஆகும்.

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

இன்றைய நாளில் உங்களுக்கு  பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுப காரியங்கள் கைகூடும்.

துலாம் ராசிக்காரர்கள் :

இன்றைய நாள் உங்களுக்கு  பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வேலையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் நாள் ஆகும்.

 

Image result for விருச்சகம் ராசி LOGO

இன்றைய நாளில் உங்களுக்கு  ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்படுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

தனுசு ராசிக்காரர்கள்:

Image result for தனுஷ் ராசி

இன்று உங்களுக்கு  நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும் நாள் ஆகும்.

 மகர ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாளில் உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். புதிய பொருட்கள் சேரும். கூட்டு தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும் நாள் ஆகும்.

கும்ப  ராசிக்காரர்கள்:

Image result for கும்பம் ராசி

இன்றைய நாள் உங்களுக்கு   வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பெற்றோர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும் நாள் ஆகும்.

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாளில் உங்களுக்கு  மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும் நாள் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்