#CSKVKKR:7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி !மீண்டும் முதலிடம்
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரின் 23வது போட்டி நடைபெற்று வருகிறது.இதில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற சென்னை அணி கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் பந்து வீச தீர்மானித்தது.இதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டை இழந்து 108 ரன்கள் மட்டுமே அடித்தது.சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ரஸ்ஸல் 50* ரன்கள் அடித்தார்.சென்னை அணியின் பந்து வீச்சில் தீபக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் பின்னர் 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.பின் 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து சென்னை அணி 111 ரன்கள் அடித்தது.சென்னை அணியில் அதிகபட்சமாக டு பிளேஸிஸ் 43 ரன்கள் அடித்தார்.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் நரேன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன் மூலம் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது சென்னை அணி .