தமிழகத்தில் மீண்டும் இடைத் தேர்தல் அறிவிப்பு: திமுகவிற்கு மீண்டும் ஒரு வெற்றி!

Default Image
  • தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தப்படாமல் காலியாக இருக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் மறைவு, திருவாரூரில் கலைஞர் கருணாநிதி மறைவு, பாலகிருஷ்ண ரெட்டி தகுதி இழப்பி திருப்பரங்குன்றம் ஏ.கே போஸ் மறைவு எனும் 22 சட்டமன்ற தொகுதிகள் தமிழகத்தில் காலியாக இருந்தது.

நாடாளுமன்றத் தேர்தல் சேர்ந்து 18 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் திருப்பரங்குன்ற,ம் அரவக்குறிச்சி ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் தேர்வு தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் அந்த சூழலில் நடத்தவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த அழுத்தத்தின் காரணமாக மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் 

  • 29ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
  • ஏப்ரல் 30ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். 
  • மே 2 வேட்புமனுக்களை திரும்ப பெற இறுதி நாள்.
  • மே 19ம் தேதி வாக்குப்பதிவு மற்றும் 
  • மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்