வாட்ஸ் அப்பில் ஸ்டாலின் பிரச்சாரம்
ஆர்கே நகர் இடைதேர்தல் நாளுக்கு நாள் பரபரப்பாக போய்கொண்டிருக்கிறது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க பிரசாரம், பணபட்டுவாடா, புகார்கள், சாலை மறியல் என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது.
இடைதேர்தலில் ஜெயிக்க அனைத்து கட்சிகளும் கடும் போட்டி போட்டு வருகின்றனர். இதில் இளைய தலைமுறையை கவர அவர்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் மூலம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் , ‘அரசை மாற்றுவதற்கான தொடக்க புள்ளியாக ஆர்கே நகர் இடைதேர்தல் அமையட்டும். அனைத்து நிலைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது. மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக இழந்து வருகிறது.’ என பேசி அதனை பதிவு செய்து வட்ஸ்அப்பில் பரவ விட்டுள்ளார்.
மேலும் அவர் ஆர்கே நகரில் பணபட்டுவாடா நடப்பதாக பல புகார்களை தேர்தல் ஆணையத்திடம் கூறிவருகிறார். ரூ.100 கோடி வரை அங்கு பணபட்டுவாடா நடப்பதாகவும் அவர் பேட்டியில் தெரிவித்து வருகிறார்.