எங்கள் கட்சியை ஊடகங்கள் புறக்கணிக்கிறது – சீமான் வேதனை
எங்கள் கட்சி வேட்பாளர்களின் ஒருவரின் பெயரை சொல்வது கூட கிடையாது. இப்படி எங்க கட்சியை திட்டமிட்டு புறக்கணிக்கும் போது ஊடகங்களின் மீது கடுமையான கோபம் வருகிறது.
மக்களவை தேர்தல் வருகின்ற 18 -ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆகிய மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரச்சாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது.
பல காட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரு மாநிலங்களிலும் கூட்டணியில் இணையாமல் தனித்து நின்று போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வேட்பாளர் களுக்காகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது விகடனுக்கு தனியாக பேட்டியளித்த சீமான் அவர்கள் கூறுகையில் , எங்க கட்சியிலும் தகுதியான வேட்பாளர்களாக இருந்தும் அவர்களை ஏன் ஊடகங்கள் புறக்கணிக்கிறது என தெரியவில்லை. மேலும் ஊடகங்களில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் பெயர்களை வரை கூறுகிறார்கள்.
ஆனால் எங்கள் கட்சி வேட்பாளர்களின் ஒருவரின் பெயரை சொல்வது கூட கிடையாது. இப்படி எங்க கட்சியை திட்டமிட்டு புறக்கணிக்கும் போது ஊடகங்களின் மீது கடுமையான கோபம் வருகிறது.
அந்த நேரத்தில் எனக்கான பொறுப்பும் கடமையும் என்னைப் பதற்றப்படாம வைக்கிறது. ஊடகங்கள் தங்கள் கட்சியை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது என கூறினார்.