RRVSKKR:கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 139 ரன்கள் அடித்துள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 21-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் அடித்துள்ளது.பட்லர் 37,ரகானே 5,திரிபாதி 5 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.களத்தில் ஸ்மித் 73*,ஸ்டோக்ஸ் 7* ரன்களுடன் உள்ளனர்.பட்லர் 37,ரகானே 5 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் ஹாரி 2,கிருஷ்ணா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
இதன் பின்னர் 140 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்க உள்ளது.