உடலுறவு குறித்து பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் அறிவீரா?
மனிதராய் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அனைவரும் அவர்தம் வாழ்வின் ஒரு காலகட்டத்தில் உடலுறவு குறித்து எண்ணி ஏங்காமல் இருந்திருக்க இயலாது. உடலுறவு என்பது மனித வாழ்வின் ஒரு பகுதி மட்டும் தான்; அதுவே முழு வாழ்வும் அல்ல.
ஆண்கள் அனைவரும் பெண்களின் உறுப்புகள் குறித்தும், அவர்கள் உடலுறவு குறித்து என்ன எண்ணுவார்கள் என்பது குறித்தும் அடிக்கடி எண்ணுவதுண்டு. இந்த பதிப்பில் உடலுறவு குறித்து பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி பார்க்கலாம்.
உலக மகளிர் உணர்வு தினம்
உலக மகளிர் தினம் என ஒரு நாள் இருப்பது போன்று, உலக மகளிர் உணர்வு தினம் என்றும் ஒரு நாள் உள்ளது; அதை உலக மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் பெண்கள் தங்களுக்கு எழும் எல்லாவித உணர்வுகள் குறித்தும் வெளிப்படையாக பேசி, தங்களது கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்படும்.
இன்னும் நம் நாட்டில் தான் உடலுறவு என்பதை பற்றி பேசுவதையே அருவருப்பான விஷயமாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம்; இனியாவது பெண்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவற்றை மதிக்க முயல்வோமாக.
எப்பொழுது ஏற்படும்?
பெண்களாயினும் சரி ஆண்களாயினும் சரி, இந்த உணர்வு ஏற்பட ஒரு குறிப்பிட்ட நேரம், சூழல், இடம் என எதுவும் இல்லை; எப்பொழுதெல்லாம் உடலுறவு குறித்த உள்ளுணர்வு ஏற்படுகிறதோ, தாம்பத்தியம் குறித்த விஷயங்களை படிக்கையில், கேட்கையில், பார்க்கையில் பெண்களுக்குள் உடலுறவு உணர்வு பொங்கி பெருகுவதாக கூறப்படுகிறது.
விசித்திர சூழல்!
பெண்களின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அவை மேலேழுகையில், பெண்களுக்கு உடலுறவு குறித்த உணர்வுகள் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு பிறப்புறுப்பில் பிரசவம் நிகழ்கையில் கூட சில பெண்களுக்கு உடலுறவு உணர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேறு வழிகள்
பெண்களுக்கு அவர்களின் உடல் உறுப்புகளை தனிப்பட்ட சூழலில் தொடுகையில், உடலுறவு உணர்வு பெரிதும் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது; பொதுவாக பெண்களின் வாய் மற்றும் கைகளை காதலுடன் ஸ்பரிசித்தால், அவர்களுக்கு உடலுறவு உணர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
சினிமா
பெண்களின் உணர்வுகள் சினிமாவில் காட்டப்படுவது போல், நிஜத்தில் இருப்பதில்லை; பெண்கள் நிஜத்தில் மிகவும் வெட்கம் மற்றும் பொறுப்பு கொண்டவர்களாக இருப்பர். ஆகையால் சினிமாவை பார்த்து, தவறான வகையில் பெண்களை அணுகுவதை தவிருங்கள்!