தூத்துக்குடியில் குளத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் நடவடிக்கைக்கு போகுமா ..?? மாவட்ட நிர்வாகம்…
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள நா.முத்தையாபுரம் என்னும் கிராம பகுதியில் உள்ள எல்லப்பன் நாயகன் குளத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றது.இதனால் அக்குளம் பராமரிப்பு இன்றி மிகவும் அசுத்தமாக காட்சியளிக்கிறது.மேலும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் அப்பகுதியில் வாழும் மக்களும்,வாலிபர்களும்,மாணவர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.