பிரசாந்த்விற்கு ஜோடியாக மிஸ்.இந்தியா அனுகிரீத்திவாஸ்
தற்போது “சாக்லெட்” படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்குகின்ற புதிய படத்தில் நடிகர் பிரஷாந்த் நடிக்க உள்ளார். ஜோடியாக இந்த ஆண்டின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுகிரீத்திவாஸ் இணைத்து உள்ளார்.
நடிகர் பிரஷாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அதுவும் குறிப்பாக பெண் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் இவர் சமீபகாலமாக திரைப்படத்தில் நடிக்க வில்லை.
இந்நிலையில் தற்போது “சாக்லெட்” படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்குகின்ற புதிய படத்தில் நடிகர் பிரஷாந்த் நடிக்க உள்ளார். ஜோடியாக இந்த ஆண்டின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுகிரீத்திவாஸ் இணைத்து உள்ளார்.
மேலும் இப்படத்தில் நாசர், பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே, நரேன், சுப்பு பஞ்சு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு ஹிந்தி சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்ஜி இசையமைக்கிறார்.
பிரஷாந்தின் பிறந்தநாளான இன்று முதல் படப் பிடிப்பு தொடங்குகிறது. படப் பிடிப்புகள் சென்னை, தென்காசி, தூத்துக்குடி, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.இப்படத்தின் பாடல் காட்சிகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்த், ஹாங்காங் ஆகிய இடங்களில் எடுக்க உள்ளனர்.