மக்களவை தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8ம் தேதி வெளியீடு

Default Image

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்தியா முழுவது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது .இந்நிலையில் முக்கிய தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவியுள்ளது.இரு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து விட்டது.

Image result for பாஜக

அதேபோல் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.ஆனால் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக மட்டும் இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் இருந்தது.இந்நிலையில் முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நடக்கும் நிலையில் 8ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது பாஜக.பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்படுகிறது. டெல்லி பாஜக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை அமித்ஷா வெளியிடுவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்