தித்திக்கும் சுவையில் கசா கசா பாயசம் செய்வது எப்படி?
குழந்தைகளுக்கு பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும். நாம் பண்டிகை நாட்களில் அதிகமாக பாயாசம் செய்வது வழக்கம்.
- தித்திக்கும் சுவையில் கசா கசா பாயசம் செய்வது எப்படி?
தித்திக்கும் சுவையில் கசா கசா பாயசம் செய்வது எப்படி என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.
தேவையான பொருட்கள்:
கசகசா –5 டீஸ்பூன் (லேசாக வறுத்தது)
ஏலக்காய் – 5
சர்க்கரை – 1 கப்
நெய் – தேவையான அளவு
தேங்காய் பால் – 1 கப்
காய்ச்சிய பால் – 1கப்
முந்திரி – 10
திராட்சை – 10
பச்சரிசி – 3 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொண்டு அதில் பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
அதற்கு பிறகு, ஊறவைத்த அரிசி , தேங்காய் துருவல் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.
பின்பு கசகசா, ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை பொடித்து வைத்து கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் அரைத்த விழுது, கசகசா, ஏலக்காய், சர்க்கரை பொடித்த பவுடர் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். இடைஇடையே இதனை கிளறி கொண்டே இருக்க வேண்டும். தேவைபட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொள்ளலாம்.
அதற்கு பிறகு 10 நிமிடங்கள் கழித்து இறக்கி ஆற வைக்க வேண்டும். நன்கு ஆறியபிறகு தேங்காய் பால், காய்ச்சிய பால், நெய் சிறிதளவு ஊற்றி கிளறவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து சேர்க்கவும்.இப்போது சூடான சுவையான கசகசா பாயாசம் ரெடி.