சருமம் வறட்சி அடைவதற்கான காரணங்கள் இது தான்
- நமது சருமம் வறட்சி அடைவதற்கான காரணங்கள் இது தான்.
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்றாக சரும பிரச்சனைகள் உள்ளது. இதற்க்கு உடனடி தீர்வு காண்பதற்காக அனைவரும் செயற்க்கையான மருத்துவ முறைகளையே நாடுகின்றனர். ஆனால், இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.
எனவே நாம் எப்போதும் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட இயற்கையான மருத்துவ முறைகளை மேற்கொள்வதே சிறந்தது. தற்போது இந்த பதிவில், சருமம் என்ன காரணங்களுக்காக வறட்சி அடைகிறது என்பது பற்றி பார்ப்போம்.
சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படும். இந்த பிரச்சனைகள் அதிகமாக குளிர்காலங்களில் தான் ஏற்படக் கூடும்.
காற்று
சருமம் வறட்சி அடைவதற்கு காற்றும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. ஏசி அறைகளில் அதிகமாக இருக்கும் போது அது சருமத்தை வறட்சி அடைய செய்கிறது. அதுமட்டுமல்லாமல், சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும் ஏற்படும்.
வெந்நீர்
நம்மில் அதிகமானோர் வெந்நீர் உபயோகிப்பதுண்டு. சிலர் குளிப்பதற்கு வெண்ணீர் பயன்படுத்துகின்றனர். சிலர் குடிப்பதற்கு வெண்ட்ட்ற பயன்படுத்துகின்றனர். ஆனால் வெந்நீர் பயன்படுத்துவதாலும், சருமம் வறட்சி அடைகிறது.
வெந்நீரில் நீண்ட நேரம் இருப்பதால், அது சருமத்திலுள்ள எண்ணெய்ப் பசையை முற்றிலும் வெளியேற்றி உலரச் செய்துவிடுகிறது.