அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து பேசிய மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.திமுக சார்பாக அதன் முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா உள்ளிட்டோர் தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பார் நாகராஜனை காப்பாற்ற அமைச்சர் வேலுமணி முயற்சிப்பதாக பேசினார் .இதனால் ஸ்டாலின் மீது கோவை தொண்டாமுத்தூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அதிமுக வழக்கறிஞர் அணியின் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.