தோல்விக்கு காரணம் இதுதான்: இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் புலம்பல்
- இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம். 150 ரன்கள் அடித்து இருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்
டெல்லி கேப்பிடல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இளம் வீரர்கள் அடங்கிய டெல்லி அணி தொடக்க முதலே அதிரடியாக ஆட முனைந்தன.
ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வலிமையான, அனுபவம் வாய்ந்த பந்தயத்திற்கு முன் அது எடுபடவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் 41 பந்துகளில் 43 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார் .
அதன் பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற கடைசியில் வந்த அக்சர் பட்டேல் 13 பந்துகளில் 23 ரன் விளாசினார். இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது டெல்லி அணி. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தரப்பில் புவனேஸ்வர் குமார், முகமது நபி, சித்தார்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அதிரடியாக ஆடினர் இதில் குறிப்பாக ஜானி பேர்ஸ்டோ 28 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார் அதன் பிறகு வந்த விஜய் சங்கர் 16 இரண்டும் முகமது நபி 17 இரண்டும் மற்ற வீரர்கள் ஓரளவிற்கு matter 18.3 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து இலக்கை எளிதாக எட்டியது சன்ரைசர்ஸ் அணி இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிட திற்கும் வந்துள்ளது ஹைதராபாத்
இந்த தோல்வி குறித்து பேசிய டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் கூறியதாவது….
கடைசி இரண்டு போட்டிகள் எங்களுக்கு ஏமாற்றம் ஆக அமைந்து விட்டது. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் பிடிப்பது சற்று கடினம். பேட்டிங்கில் நாங்கள் சொதப்பிவிட்டோம். இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம். 150 ரன்கள் அடித்து இருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். சரியாக பேட்டிங் பிடிக்காததே தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்