இன்று (ஏப்ரல் 5 ஆம் தேதி ) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?
இன்று (ஏப்ரல் 5-ஆம் தேதி ) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்கள்:
இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும்.அதேபோல் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரமான மற்றும் இனிப்பான உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ரிஷப ராசிக்காரர்கள்:
இன்று உங்களுக்கு உகந்த நாள் ஆகும்.இன்றைய நாளை உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக மாற்றலாம் . உங்கள் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தர வாய்ப்பு உள்ளது.மேலும் உங்கள் நன் மதிப்பு பெருகி காணப்படும்.
மிதுன ராசிக்காரர்கள்:
இன்று உங்களுக்கு செழிப்பான நாளாக இருக்கும்.நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். இன்று பல முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள்.
கடக ராசிக்காரர்கள்:
இன்று வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் உங்கள் கவனத்தை திசை திருப்புங்கள். உங்கள் செயல்களில் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதை விட சாதாரணமாக செயல்படுவது நல்லது.மேலும் இன்றைய சூழ்நிலையை நீங்கள் அமைதியாக கையாள வேண்டும் நாள் ஆகும்.
சிம்ம ராசிக்காரர்கள் :
இன்று நீங்கள் அமைதியான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.மேலும் இன்றைய நாளில் சில பதட்டமான சூழ்நிலை காணப்படும்.முக்கியமாக குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள்.இன்றைய நாள் நன்றாக இருக்கும்.
கன்னி ராசிக்காரர்கள் :
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாள் ஆகும்.குறிப்பாக நீங்கள் எந்தச் செயல் செய்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். புதிய மனிதர்களை சந்தித்து அவர்களின் நட்பை பெறுவீர்கள். இன்று முழுவதும் நீங்கள் சந்தோசமாக இருப்பீர்கள்.
துலாம் ராசிக்காரர்கள் :
இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் பல நல்ல பலன்களை அளிக்கும். இன்று எழும் எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் உறுதி மற்றும் தைரியம் உங்களிடம் அதிகம் காணப்படும்.
விருச்சக ராசிக்காரர்கள்:
இன்றைய நாளில் நீங்கள் விவேகத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டும். அதிகமாக யோசிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பாதகமான சூழ்நிலைகள் ஏற்படும் எனபதால் உங்கள் செயல்களை கவனமாகச் செய்ய வேண்டும்.
தனுசு ராசிக்காரர்கள்:
இன்றைய நாள் உங்களுக்கு சவால்கள் நிறைந்து காணப்படுவதால் சாதகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்வதை கடினமாக உணர்வீர்கள்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அமைதியாக இருப்பதன் மூலம் நன்மை பெறலாம்.
மகர ராசிக்காரர்கள்:
இன்றைய நாள் உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்கும். நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். நீங்கள் சமநிலையோடு நடந்து கொள்வீர்கள்.இது உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.
கும்ப ராசிக்காரர்கள்:
இன்றைய நாளில் நீங்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்காதீர்கள். இன்று சில வசதிகளை இழக்க நேரிடும். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பொது விழாக்களில் கலந்து கொள்வதும் உங்களுக்கு நல்ல பலனளிக்கும்.
மீன ராசிக்காரர்கள்:
இன்றைய நாள் உங்களுக்கு கொஞ்சம் மந்தமான நாளாக இருக்கும். இன்று அமைதி தேவையெனில் தைரியம் உறுதி மற்றும் நம்பிக்கை அவசியம்.