சூப்பர் டீலக்ஸ் டிரைலர் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி குரலில் அவேன்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தின் டிரைலர் இதோ!
அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியும் , ப்ளாக் வீடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
ஹாலிவுட் திரைப்படத்தில் கடைசியாக “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பையும் , சிறந்த வசூலையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “அவெஞ்சர்ஸ் என்ட் கேம்”என்ற பெயரில் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை வெளியிட்டார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் விஜய் சேதுபதி குரலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியும் , ப்ளாக் வீடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
https://youtu.be/BKSsg7PbffU