உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீட்ச்சை பழம்
- உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீட்ச்சை பழம்.
நம்மில் அதிகமானோர் பேரிட்சை பழத்தை விரும்பி உண்ணுகிறோம். பேரிட்சை பழத்தில் பல பகையான மருத்துவ குணங்கள் உள்ளது. இப்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு.
பேரிட்சை பழத்தில் கனிசத்துக்களும் அதிகமாக உள்ளது. மேலும், இந்த பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இப்பதிவில் பேரிட்சை பழத்தின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
கெட்ட கொழுப்பு
பேரிட்சை பழத்தை தினமும் சாப்பிட்டால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது உடல் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இரத்த சோகை
பேரிச்சம் பழம் இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இரும்புசத்து அதிகாமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் பேரிச்சம் பலத்திற்கு உள்ளது.
நரம்பு மண்டலம்
பேரிச்சம் பழத்திற்கு நரம்பு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. ஏன்னென்றால் பேரிச்சம் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதனை உட்கொண்டால் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் பலப்படும்.
சளி இருமல்
சளி இருமல் பிரச்சனை உள்ளவர்களுக்கு பேரிச்சம் பழம் ஒரு சிறந்த மருந்தாகும். பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.
நரம்பு தளர்ச்சி
நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு பேரிச்சம் பழம் ஒரு சிறந்த மருந்தாகும். பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி உடலுக்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் அளிக்கிறது.
இதய நோய்
இதய நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு பேரிச்சம் பழம் ஓரு சிறந்த மருந்தாகும். மேலும். இதை நோய் பிரச்சனை இல்லாதவர்களும் இதனை சாப்பிட்டு வந்தால், இதய நோய்கள் வராமல் நம்மை நாம் பாதுகாத்து கொள்ளலாம்.
கண்பார்வை
கண்பார்வை பிரச்சனை உள்ளவர்களுக்கு பேரிச்சம் பழம் ஒரு சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால், பார்வை நீங்கும்.