எனக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி சொத்து உள்ளது என வேட்பாளர் கூறிய பகீர் தகவல்!
- நெல்லையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் மோகன் ராஜ் என்பவர் தேர்தல் ஆணையத்தின் ஒரு சார்பான நடவடிக்கை குறித்து விமர்சிப்பதற்காக நூதனமான முறையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்
சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும் 4 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் போலி ஆவணங்கள் தயாரித்து, தான் போட்டியிட தகுதி பெற்று விட்டதாகவும் அறிவித்துள்ளார்.
அவர் வேட்புமனு தாக்கலில் பதிவு செய்ததில் தான் அறிவித்த எந்த செய்தியையும் சரியாக குறிப்பிடவில்லை. குற்ற வழக்கை மறைத்துள்ளார் அரசு பதவியில் இருந்ததையும் மறைத்துள்ளார்.
ஆனால் இதுபோன்ற சிறு சிறு காரணங்கள் காட்டி தேர்தல் அதிகாரிகள் மனுக்களை நிராகரித்து செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற தேர்தல் ஆணையத்தின் மெத்தனத்தை சுட்டிக்காட்ட முடிவு செய்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வேட்புமனுத் தாக்கலின் போது தனக்கு கோபாலபுரம், போயஸ் கார்டன், சிறுதாவூர் கொடநாடு ஆகிய பகுதிகளில் சொத்துக்கள் இருப்பதாகவும் ஒரு லட்சத்தி 76 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாகவும் 4 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் போலியான ஆவணங்கள் தயாரித்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதனை எல்லாம் ஏற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரிகள் என்னை போட்டியிடவும் அனுமதித்து விட்டனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை நாட்டு மக்களுக்கு தோலுரித்துக்காட்ட இப்படி போலியான ஆவணங்கள் தயார் செய்து தாக்கல் செய்தேன் எனவும் கூறியுள்ளார்.