உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கும் பெருங்காயத் தூளின் மருத்துவ குணங்கள்
- பெருங்காயத் தூளில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்கள்.
நமது அன்றாட வாழ்வில் நமது செயல்களில் பல பொருட்கள் முக்கியப்பங்கினை வகிக்கிறது. நாம் சமையலில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே, ஏதோ ஒரு வகையில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இன்று நாம் இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கும் பெருங்காயத் தூளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
சரும பிரச்சனைகள்
பெருங்காயத் தூள் சமையலுக்கு மட்டுமல்லாமல், சரும பிரச்சனைகளை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமத்தில் ஏற்படும் பருக்கள்,தழும்புகள் , கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை போக்குவதற்கு, பெருங்காயத் தூளை கொஞ்சம் முகத்தில் தடவி வந்தால், சரும வியாதிகளில் இருந்து விடுதலை பெறலாம்.
தலைவலி
பாதிக்கப்படும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று தலைவாழை. வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள் என அனைத்திலும் காணப்படுகின்ற தொல்லையின் திரட்சி காரணமாக தலைவலி ஏற்படுகிறது.
இந்த தலைவலியை போக்குவதற்கு பெருங்காயத் தூளை வெந்நீருடன் , சிறிது நேரத்தில் தலைவலி குணமாகிவிடும்.
வயிற்று பிரச்சனைகள்
பெருங்காயத் தூள் வயிற்றில் ஏற்படுகிற பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. செரிமானமின்மை, வயிற்றுவலி, வாயு, குடல் புழுக்கள், வயிற்று எரிச்சல்கள் போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதில் பெருங்காயத்தூள் பெரும்பங்கு வகிக்கிறது.
நீரிழிவு
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று நீரிழிவு. இந்த நோயை கட்டுக்குள் வைப்பதற்கு பெருங்காயத்தூள் உதவுகிறது. நாம் உண்ணும் உணவில் பெருங்காயத் தூளை வந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயில் இருந்து விடுதலை அளிக்கிறது.
மாதவிடாய்
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு பெருங்காயத் தூள் ஒரு சிறந்த தீர்வினை அளிக்கிறது. பெருங்காயத் தூளை நாம் உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு,ஒழுங்கற்ற மாதவிலக்கு காலம் போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.
சுவாச கோளாறு
சுவாசிக்க கோளாறு பிரச்னை உள்ளவர்களுக்கு பெருங்காயம் ஒரு சிறந்த மருந்தாகும். சுவாச பிரச்சனைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் பெருங்காயமும் ஒன்று. இது சுவாச கோளாறுகளான சுவாசிக்க குழாய் புண்கள், வறட்டு இருமல், ஆஸ்துமா,மார்புச்சளி போன்றவற்றை குணமாக்குகிறது.
இரத்தம்
பெருங்காயம் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குகிறது. பெருங்காயத்தில் உள்ள கவ்மரின் என்ற பொருள் இரத்தத்தை மெலிவூட்டி இரத்த உறைதலை தடுத்து, உறைவெதிர்ப்பு தன்மை மற்றும் குணப்படுத்து ஆற்றலை அளிக்கிறது.
மேலும், ஈரத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்கி, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
புற்று நோய்
பெருங்காயத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது. எனவே, நமது உணவுகளில் பெருங்காயத்தை அதிகமாக சேர்க்கும் போது, புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றலை பெற முடியும்.
நரம்பு
பெருங்காயத் தூள் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது. நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. மேலும், இது இதர நரம்புகளை அமைய உதவி செய்கிறது.