சிவாஜி கணேசன் பாதத்தை தொட்டு மரியாதை செய்த அமிதாப் பச்சன்! காரணம் இது தான்

Default Image

தமிழ் சினிமாவில்  மறக்க முடியாது நடிகர்களாக நம் மனதில் இன்றும் இருப்பவர்கள் நடிகர் சிவாஜி கணேசன், எம் .ஜி .ஆர் , நம்பியார் ,ஜெமினி கணேசன் மாபெரும் நடிகர்களாக வலம் வந்தவர்கள்.

இந்நிலையில் நடிகர் சிவாஜி கணேசன் புகழ் உலகமெங்கும் பரவியது, ஆனால் அவர்  நம்மை விட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் பிரிந்துவிட்டார். நடிகர் திலகம் என்ற  பட்டத்திற்கு ஏற்றாற்போல அந்த அளவிற்கு எல்லா விதமான வேடத்திற்கும் மிக சிறப்பாக நடித்து உள்ளார்.

தற்போது உள்ள பல நடிகர்களின் குருவாக இன்றும் நடிகர் சிவாஜி கணேசன் உள்ளார்.இந்நிலையில் அமிதாப் பச்சன் உயர்ந்த மனிதன் என்ற படத்தில்  நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “சிவாஜி கணேசன் என்ற குருவிற்கு கீழ் அவரது சீடர்களாகிய நானும் சூர்யாவும் உள்ளோம். தமிழ் சினிமாவில் பொக்கிஷம் சிவாஜி கணேசன்.

அவருடைய படத்தை சுவரில் வைத்து பாதத்தை தொட்டு வணங்கி மரியாதை செய்தோம். அவர் மாஸ்டர், நாம் அவருடைய சீடர்கள்” என பதிவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்