பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் எது தெரியுமா? ஐ.நா -வின் அதிரடி அறிக்கை
- பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம்அவர்களது சொந்தவீடே.
பெண்களை பொறுத்தவரையில், அக்காலம் தொட்டு இக்காலம் வரை பல பெண்கள் இன்னும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். கடந்த ஆண்டில் கொலை செய்யப்பட்ட பெண்களில் பகுதியளவு பெண்கள், தங்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் போதை மருந்து மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் அறிக்கை
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றுவதற்கான சர்வதேச தினமான நவ.25-ம் தேதி, 2018 ஆம் ஆண்டு, பெண்கள் குறித்து ஐ.நா ஒரு முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை ஐ.நா.வின் போதை மருந்து மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.
பெற்றோர்களால் கொலை
அந்த அறிக்கையில், கடந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் கணவன், பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளதால், அவர்களது வீடே பெண்களுக்கு மிக ஆபத்தான இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து 2017-ஆம் ஆண்டுக்கு இடையே பெண்கள் தங்களின் கணவர்கள், குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்ட விகிதாச்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளது.
பெரும்பாலும் தங்களின் கணவராலும், வரதட்சணைக் கொடுமையாலும், சாதிமாறி செய்யப்படும் திருமணத்தால் நடக்கும் ஆணவக் கொலையாலும் கொல்லப்படுகிறார்கள் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது, பாலின பாகுபாடு, சமத்துவமின்மை போன்ற காரணங்களால்தான் பெண்கள் அதிகளவில் கொலை செய்யப்படுகின்றனர்என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படும் சூழல் இன்னும் உருவாகவில்லை
உறவுகள் மற்றும் குடும்பத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படும் சூழல் இன்னும் உருவாகவில்லை என ஐ.நா-வின் போதைப் பொருள் மற்றும் குற்றப்பிரிவு தடுப்பு தலைமை அதிகாரி யுரி ஃபெடோடொவ் கூறியுள்ளார்.
ஒரு மணி நேரத்திற்கு 6 பெண்கள் தங்களுக்கு விருப்பமானவர்களால் கொலைசெய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர். பெரும்பாலான கொலைகள் காதல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் தான் ஏற்படுகிறது என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.