அசத்தும் சுவையில் முந்திரி கோகோ கட்லி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா ?
முந்திரி நமது உடலுக்கு மிகவும் சிறந்த உணவாகும். மேலும் முந்திரியில் பல வைட்டமின், கனிம சத்துக்களும் மற்றும் பல சத்துக்களும் அதிக அளவில் காணப்படுகிறது.
- முந்திரி கோகோ கட்லி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா?
முந்திரி கோ கோ கத்லி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
முந்திரி – ஒரு கப்
சக்கரை – அரை கப்
கோகோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் முந்திரியை மிக்ஸ்யில் போட்டு நன்கு பவுடராக அரைக்கவும். அதற்கு பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
பாகு கம்பி பதத்திற்கு வந்தவுடன் கோகோபவுடர் மற்றும் முந்திரியை தூவி நன்கு கிளற வேண்டும். இந்த கலவை கெட்டியானவுடன் இறக்கி ஒரு தட்டில் நெய் தடவி இந்த கலவையை கொட்டி ஆறியவுடன் துண்டுகள் போடவும். இப்போது சுவையான முந்திரி கட்லீ தயார்.