உங்க குழந்தைகள் வாழ்க்கை சிறக்க உதவும் நல்ல பழக்க வழக்கங்கள்

Default Image

 

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை படிக்க வைத்தால் நமது கடமை முடிந்து விடும்  என பல பெற்றோர்கள் எண்ணுவது தவறு.அவர்களுக்கு தேவையான நல்ல பழக்க வழக்கங்களையும் நாம் தான் கற்று கொடுக்க வேண்டும். குழந்தைகள் படித்தால் மட்டும் போதாது அவர்கள் படிப்பதற்கு பல நல்ல பழக்க வழக்கங்கள் மிகவும் இன்றியமையாதது.

  • உங்க குழந்தைகள் வாழ்க்கை சிறக்க உதவும் நல்ல பழக்க வழக்கங்கள்

குழந்தைகள் இப்போது நாம் சொல்லி கொடுக்கும் பழக்கங்களை தான் நாளடைவில் அவர்களின் வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பார்கள். எனவே நாம் தான் அவர்களின் வாழ்க்கைக்கு தூண்டு கோலாக இருந்து பல நல்ல பழக்க வழங்கங்களை கற்று கொடுக்க வேண்டும். குழந்தைகள்  வாழ்க்கையில் சிறக்க உதவும் நல்லபழக்க வழக்கங்களை எவ்வாறு குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோமாக.

தன் சுத்தம் பேணுதல்:

 

குழந்தைகளுக்கு முதலில் தன்னை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை கற்று கொடுக்க வேண்டும்.

காலையில்,மாலையில் பற்களை துலக்க கற்று கொடுக்க வேண்டும். தினமும் குளிக்க வேண்டியதன் அவசியத்தை கற்று கொடுத்தல்,சில குழந்தைகள் குளிக்க சிரமப்படுவார்கள் அவர்களுக்கு குளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது அவசியம்.

மேலும் அவர்கள் இருக்கும் இடங்களை எப்போதும் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக வைத்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவிய பின்பு சாப்பிட அனுமதிக்க வேண்டும்.சாப்பாட்டுக்கு முன்பு கைகளை கழுவாமல் சாப்பிட அனுமதிக்க கூடாது.

தினமும் கழுவி உலர்ந்த ஆடைகளை பயன்படுத்த சூலி கொடுக்க வேண்டும்.

மரியாதை:

குழந்தைகளுக்கு கற்று கொடுக்கும் முக்கியமான பழக்கங்களில் ஒன்று மரியாதை. பெரியவர்களிடம் மரியாதையை கொடுக்கும் பழக்கங்களை முக்கியமாக அவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும்.

மேலும் நன்றி மற்றும் தயவு செய்து ஆகிய வார்த்தைகளை  பயன்படுத்துவதை குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்.

பெரியவர்களின் அறிவுரைகளை கேட்கும் பழக்கத்தை நாம் கற்று கொடுக்க வேண்டும்.

பகிர்ந்து கொள்ளும் பண்பு சிறந்தது:

 

குழந்தைகளுக்கு பகிர்கொள்ளும் பழக்கத்தை  நாம் முக்கியமாக கற்று கொடுக்க வேண்டும் ஏனென்றால் தற்போதைய குழந்தைகளிடம் இந்த பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. குழந்தைகள் தங்களுடைய பொருட்களை வீட்டில் இருக்கும்  உடன் பிறந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை கற்று கொடுப்பது மிகவும் அவசியமாகும்.

மேலும் சாப்பிடும் உணவு பொருள்களையும் பகிர்ந்து சாப்பிடுவதற்கு சொல்லி கொடுப்பதும் சிறந்த பழக்கமாகும்.

மேலும் இந்த பழக்கங்களை நாம் கற்று கொடுப்பதால் அவர்கள் மற்றவர்களிடம் அவர்களுடைய பொருட்களை பகிர்ந்து கொள்வார்கள்.

உணவுப்பழக்கம் :

குழந்தைகளுக்கு கடைகளில் உணவுகளை வாங்கி கொடுத்து பழக்க கூடாது. பிற்காலத்தில் அது அவர்களின் உடல்நலத்திற்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் .

அதற்கு பதிலாக குழந்தைகளுக்கு அவர்கள் கேட்ட உணவு பொருட்களை வீட்டில் செய்து கொடுப்பது மிகவும் சிறந்தது.

அவர்களுக்கு எப்படி உற்காந்து சாப்பிட வேண்டும் என்பதை நாம் அவசியம் கற்று கொடுக்க வேண்டும் .மேலும் சிந்தாமல் சாப்பிட கற்று கொடுக்க வேண்டும்.

உணவின் முக்கியதுவத்தை  உணர்த்தி அவர்கள் உணவை வீணாக்காமல் சாப்பிட கற்று கொடுக்க வேண்டும்.

நேரம் தவறாமை :

நேரம் தவறாமை குழந்தைகளுக்கு கற்று கொடுக்கும் முக்கிய பழக்கங்களில் ஒன்று. குழந்தைகளுக்கு நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களின் செயல்களை செய்ய பழக்க வேண்டும்.

இவ்வாறு நேரம் தவறாமையை கற்று கொடுக்காமல் விட்டு விட்டால் நாளடைவில் அவர்களுக்கு நேரத்தின் முக்கிய துவம் தெரியாமல் போய்விடும்.இதனால் அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

உடற்பயிற்சி :

 

குழந்தைகளுக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி குழந்தைகளுக்கு  எடுத்து கூற வேண்டும்.அவர்களை தினமும் காலையிலும் ,மாலையிலும் உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்