வயது முதிர்ந்தவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் சாப்பிட கூடாத உணவுகள் .
- வயது முதிர்ந்தவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் சாப்பிட கூடாத உணவுகள்.
வயது போக போக நமது உடல் ஆரோக்கியத்திலும் பல மாறுபாடுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. உடல் ஆரோக்கியம் குறைபாடுகள் ஏற்படும். இந்த நோய்கள் நம்மை முழுமையாக நோயில் தள்ளி விடும்.
இந்நிலையில், முதுமை தோற்றத்தை தூண்டுவது, ஃப்ரீ ரேடிக்கல்ஸ் தான். இதனை தடுப்பதற்கு க்ரீன் டீ அருந்தலாம். மேலும், பல வகைகளில் பப்பாளி மற்றும் மதுரை போன்ற பலன்களை சாப்பிடுவதால் இளமை தோற்றத்தை பெறலாம்.
மலசிக்கல்
முதுமை அடைந்த பிறகு அவர்களை பாதிக்கக் கூடிய முதல் பிரச்சனை மலசிக்கல் பிரச்சனை தான். இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை பெற சப்போட்டா பழம் சாப்பிட வேண்டும். மேலும், மாம்பழம் மற்றும் வாழைப்பழம் போன்ற பழங்களும் சாப்பிடலாம்.
பாசி பயறு
முதுமையில் அதிகமாக தானிய வகைகளை சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். தினந்தோறும் பாசி பயறு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும், வைட்டமின் பி6 மற்றும் புரதச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
கொழுப்பு
முதுமையில், அதிகமாக கொழுப்புடைத்துள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நல்லெண்ணெய், அரிசி தவிட்டு போன்றவற்றை குறைவாக பயன்படுத்த வேண்டும்.
புரத சத்து
முதுமையில் ஏற்பாடக் கூடிய நோய்களை தவிர்க்க புரத சத்து மிகவும் அவசியமான ஒன்று. அதற்கு முளைகட்டிய பயறு வகைகள் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.
மூட்டுவலி
வயது முதிர்த்தாலே அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று மூட்டுவலி, இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், வற்றல்குழம்பு மற்றும் புளியோதரை போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இப்படிப்பட்டவர்கள், கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் கரிசலாங்கண்ணி போன்ற உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காரம்
வயது முதிர்ந்தாலும் சிலர் இருந்தால் தான் சாப்பிடுவார்கள், அப்படிப்பட்டவர்கள் மிளகாய்க்கு பதிலாக்கு மிளகு சேர்த்து கொண்டால், அது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.