குதிகால் வெடிப்பினால் உங்களுடைய கால் மிகவும் அசிங்கமாக இருக்கிறதா இதோ உங்க கால் அழகாக கலக்கல் டிப்ஸ்
இன்றைய இளைய தலைமுறையினர் பெரிதும் குதிகால் வெடிப்பினால் பாதிக்க படுகிறார்கள். இதனால் அவர்கள் வெளியில் செல்வதை கூட விரும்புவதில்லை.அவர்களுடைய கால்களையும் யாரிடமும் காட்ட விரும்புவதில்லை.
குதிகால் வெடிப்பினால் கால்வலியும் ஏற்படும். நீண்ட நேரம் நடக்க முடியாத சூழ்நிலைக்கு நாம் ஆளாக நேரிடும்.
குதிகால் வெடிப்பில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள சில எளிய வழிமுறைகள்:
குதிகால் வெடிப்பு எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் நீரிலேயே நீண்ட நேரம் இருந்தாலும் , கால்கள் அதிகம் நீரில் ஊறி, சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்ப்பசை அனைத்தையும் வெளியேற்றி விடும். இதனால் கூட குதிகால் வெடிப்பு ஏற்படலாம். மேலும் உடல் எடை அதிகமாக இருந்தாலும் குதிகால் வெடிப்பு ஏற்பட நேரிடும்.ஏனென்றால் கால்களுக்கு அதிக அளவில் அழுத்தம் கொடுப்பதால் இந்த பிரச்சனையை சந்திக்க கூடும். அதிகப்படியான வறட்சியினால் கூட ஏற்படும். இதனை பித்த வெடிப்பு எனவும் அழைப்பர்.
எண்ணெய் மசாஜ்:
தினம் தோறும் இரவில் உறங்குவதற்கு செல்லும் முன்பு பாதாம் எண்ணெய் ,நல்லெண்ணெய்,ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் கால்களை நன்கு கழுவி வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.
இவ்வாறு தினமும் செய்து வர பாதங்கள் மென்மையாக மாறும் காலில் உள்ள பித்த வெடிப்புகளும் படிப்படியாக குறையும்.
எலுமிச்சைசாறு :
எலுமிச்சை சாறு சருமத்தின் வறட்சிக்கு மிக சிறந்த தீர்வாகும்.எலுமிச்சை சாறை காலையில் எழுந்தவுடன் சுடுநீர் கலந்து பருகி வர சருமம் பொலிவு பெறும்.உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் வெளியேறும்.
மேலும் உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். எலுமிச்சை சாறை,பயித்தம் பருப்பு மாவு , அரைத்த வேப்பிலை விழுது ,கஸ்தூரி மஞ்சள், ஆகியவற்றுடன் நன்கு கலந்து பித்த வெடிப்பு இருக்கும் இடங்களில் பூச வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வர காலில் உள்ள பித்த வெடிப்புகள் நீங்கி கால் அழகாக மாறும்.
வெங்காயம் :
வெங்காயம் நமது உடலில் ஏற்படும் பலவகையான பிரச்சனைகளுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.இதில் அதிக அளவு சத்துக்கள் காணப்படுகிறது.
வெங்காயத்தை வதக்கி அதனை நன்கு அரைத்து பாத வெடிப்பு இருக்கும் இடங்களில் பூசி வர பித்தவெடிப்பு நீங்கும்.
மருதாணி:
மருதாணியை பயன்படுத்த நம் முன்னோர்கள் அறிவுறுத்தியதன் காரணம் என்ன தெரியுமா மருதாணி நம் உடலில் பல் விதமான பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும்.
ஆனால் நாம் மருதாணியை அழகிற்காக பயன்படுத்துவதாக நினைத்து பல செயற்கை பொருட்களை மருதாணி என்ற பெயரில் கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.அவற்றை வாங்கி நாம் பயன்படுத்தி பல இன்னல்களுக்கு ஆளாகிறோம் .
இயற்கையாக மருதாணி இலைகளை பயன்படுத்தினால் பல நன்மைகளை நாம் அடையலாம்.
மருதாணி பவுடருடன் ,தேங்காய் எண்ணெய் ,டீ தூள் கலந்து பூசி வர பித்த வெடிப்புகள் நீங்குவதோடு பாதம் அழகாகவும்,பொலிவாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கை நன்கு காய வைத்து தூளாக்கி பின்பு அதை தண்ணீர் விட்டு பேஸ்ட் ஆக்கி காலில் வெடிப்பு இருக்கும் இடங்களில் பூசி வருவதால் பித்தவெடிப்பு மறையும். மேலும் வெடிப்பினால் ஏற்பட்ட கருமைகளும் நீங்கி பாதம் அழகாக மாறும்.