பனங்கற்கண்டின் முக்கியமான மருத்துவ குணங்கள்

Default Image

நமது அன்றாட வாழ்வில் நமது உடல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமான ஒன்று. இதற்காக நாம் பல வழிகளில், உழைத்து வருகிறோம். ஆனால் மேலை நாட்டு கலாச்சாரங்கள் ஊடுருவி உள்ள நிலையில், அனைத்து மக்களும் மேலை நாடு கலாச்சாரங்களையே அனைவரும் நாடி வருகின்றனர்.

ஆனால், நாம் இயற்கையான உணவுகளை நாடுவதை விட, இன்று செயற்கையான உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இது நமது உடலுக்கு பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது.

பனங்கற்கண்டு

நமது முன்னோர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்தார்கள் என்றால், அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கான உணவு என்னாவாக இருந்திருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். இன்று இந்த பதிவில் நாம் பனங்கற்கண்டின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

Related image

தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ என இருவகையாக பிரித்து அழைப்பர்.

மார்புச்சளி

Related image

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று, மார்பு சளி. இப்படிப்பட்டவர்கள், பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி ஆகியவை விலகும்.

கருவுற்ற பெண்கள்

Image result for கருவுற்ற பெண்கள்

கருவுற்ற பெண்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது. பனங்கற்கண்டு கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் வயிற்று புண்ணை குணமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதய நோய்

Image result for இதய நோய்

இதய நோய் உள்ளவர்களுக்கு பனங்கற்கண்டு ஒரு சிறந்த மருந்தாகும். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுத்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பற்கள்

Related image

பனங்கற்கண்டில் கால்சியம் அதிகமாக உள்ளது. எனவே இதனை நாம் உட்கொண்டு வந்தால் பற்களின் ஈறுகள் உறுதியாக இருக்கும்.

காசநோய்

Image result for காசநோய்

பனங்கற்கண்டில் உள்ள இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்