திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மகேந்திரன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்
மகேந்திரன் குடும்பத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், திரையுலகின் சார்பிலும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் , நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் தமிழில் “முள்ளும் மலரும்” , “உதிரிப் பூக்கள்” ஆகிய பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் தமிழ் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
இவர் சமீப காலமாக பல படங்களில் ஒரு நடிகராக வலம் வந்தவர். “தெறி” , “பேட்ட” , “சீதக்காதி “ஆகிய படங்களில் பிரபலமான நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவருக்கு உடல் நிலை சரில்லாமல் மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டார்.சில நாள்களாக இவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.