வறண்ட சருமம் வேதனை அளிக்கிறதா அழகான சருமம் வேணுமா அசத்தலான சூப்பர் டிப்ஸ்

Default Image

நமது இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதும் அவதிக்குள்ளாகும் பாதிப்புகளில் சருமம் பிரச்சனையும் ஒன்று.  நமது உடல் ஆரோக்கியத்திற்கு  உணவுகள் முக்கிய காரணியாக விளங்குவதை போல  நமது சரும ஆரோக்கியத்திற்கு உணவும் மிகவும் அவசியமான ஒன்றாகும். கோடைகாலத்தில் தான் நாம் அதிகஅளவில் சரும பிரச்சனைகளினால் பாதிப்பிற்கு உள்ளாகிறோம்.

சரும பிரச்சனைகளை போக்க சில வழிமுறைகள்:

சரும பிரச்சனைகள் பலவற்றை போக்க ஊட்டச்சத்துக்கள் அவசியம் தேவை. சருமம் புத்துணர்ச்சியுடன் இருந்தால் பல வெளிபுறக்காரணிகளால் ஏற்படும் சருமசேதத்தை முற்றிலும் தவிர்க்கலாம்.

எவ்வாறு நாம் சருமபிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்து தெரிந்து கொள்வோம்.

கோதுமை:

 

கோதுமை ,கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களில் இருந்து நீக்கப்படும் உமி,தவிடு போன்றவை அழகூட்டும் பொருள்களில் சேர்க்கபடுகின்றன.

இந்த பொருள்களில் வைட்டமின் இ சத்துமிகுந்து காணப்படுகிறது. இந்த தானியத்தின் தவிடுகள் ,முகத்தில் உள்ள இறந்த செல்களை நீங்குவதோடு முகசுருக்கத்தையும் அகற்றுகிறது.

நமது சருமத்தில் இளமையையும் பளபளப்பையும் அதிகரிக்க செய்கிறது. சருமத்தின் பல பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைப்பதோடு மட்டுமல்லாமல் சருமத்திற்கு ஊட்டம் அளிக்கிறது.

வைட்டமின் ஏ சத்து கோதுமையில் நிறைந்து காணப்படுவதால் கோதுமையை தினசரி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கும்.

தண்ணீர்:

ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டியது மிகவும் அவசியம். தண்ணீர் அதிகம் பருகுவதால் சருமம் வறண்டு போகாமல் நீர் சத்துடன் இருக்கும். இவ்வாறு நாம் தண்ணீரை அதிகம் எடுத்து கொள்வதால் முகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி முகம் சுத்தமாக இருக்கும்.

மேலும் தண்ணீர் கொண்டு அடிக்கடி முகத்தை கழுவுவதும் மிக சிறந்த தீர்வாகும்.மேலும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மிகவும் பயன் தரும்.

கேரட் மற்றும் பீட்ருட்:

 

கேரட்,பீட்ருட் ஆகிய உணவு பொருட்களை உணவில் சேர்த்து கொள்வதால் முகம் இளமையுடன் இருக்கும். தினமும் முகம் வறண்டு போகாமல் இருக்க வேண்டுமானால் கேரட்,பீட்ருட் களை ஜூஸ் போட்டு பருக வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வர முகத்திற்கு பொலிவை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கும் நல்ல ஊட்ட சத்துக்களை அளிக்கும்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் உடலுக்கு பல சத்துக்களை கொடுக்கும்.தேங்காய் எண்ணெய்யை நாம் சமையலில் பயன்படுத்தி வந்தால் பல்வேறு விதமான உடல் நோய்களும் குணமாகும்.

ஆரோக்கிய கொழுப்புகளை கொண்ட தேங்காய் எண்ணெய் ,அவகோடா  போன்றவை உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.மேலும் இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் முகத்திற்கு இழந்த பொலிவினை மீட்டு கொடுக்கும்.

ஆளிவிதை :

 

 

உடலுக்கு  அழகையும் இளமையையும் கொடுக்கும் பொருட்களில் ஆளிவிதையும் மிகவும் முக்கியமான ஒன்று.சரும பொலிவு மற்றும் ஆற்றலை மேம்படுத்திட ஒமேகா கொழுப்பு உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் சிறந்தது.

சாலமோன் ,ஆளி விதைகளில் ஒமேகா 3 கொழுப்புகள் அதிகமாக இருக்கிறது  உடலின் தோற்ற பொலிவுகளை அதிகரிக்க இது உதவியாக இருக்கும்.

சூரிய ஓளி:

 

சூரிய ஒளி சருமத்திற்கு பொலிவினை ஏற்படுத்தும். ஒரு நாளில் காலை மற்றும் மாலை நேரங்களில் 15 நிமிடங்கள் நம் மீது சூரிய ஓளி படும் படி பார்த்து கொள்வதால் சருமம் நல்ல ஆரோக்கியத்தை பெறும்.இவ்வாறு செய்து வர சருமம் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உறக்கமின்மை பிரச்சனையும் தீரும்.

உறக்கம் :

உடலுக்கு உள்ளே செல்லும் உணவுகளால் உடலுக்கு வெளியே ஏற்படக்கூடிய மாற்றங்கள் அதிக அளவில் இருக்கிறது.முகம் பொலிவுடன் இருக்கும் முகம் பொலிவுடன் இருக்க மனஅழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டியதும் மிகவும் அவசியம் ஆகும்.

அதே போல் ஒரு நாளைக்கு தினசரி 7  மணி நேரம் வேண்டியதும் மிகவும் அவசியமான ஓன்று.இரவுநேரங்களில் நாம் உறங்காமல் இருந்தாலும் முகபொலிவு பாதிப்பு அடையும். எனவே முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்றால் ஆழ்ந்த உறக்கம் மிக முக்கிய காரணியாகும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்