அதிமுகவுடன் தினகரன் இணையும் காலம் வரும்!மீண்டும் சர்சையை கிளப்பிய மதுரை ஆதினம்!

Default Image

தொடர்ந்து பொய் தகவல்களை பரப்பினால் மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினகரன் எச்சரித்துள்ளார். 

ஜெயலலிதா மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. முதலில் பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணி மீண்டும் எடப்பாடி அணியுடன் இணைந்தது.அதே வேளையில்  சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறந்த தண்டனை அனுபவித்து வருகிறார்.

பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .

இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.

Image result for பழனிச்சாமி ttv

இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

சமீபத்தில் மதுரை ஆதீனம் கருத்து ஒன்றை தெரிவித்தது.அதில் அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் விரைவில் அந்த கட்சியுடன் இணைவார் எனவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து விட்டது எனவும் தெரிவித்தார்.

Image result for தினகரன் ஆதினம்

அதிமுகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என தினகரன் மறுப்பு தெரிவித்து வந்தார்.இந்நிலையில் இன்று மீண்டும் மதுரை ஆதினம் கருத்து தெரிவித்துள்ளார்.அதாவது அவர் கூறுகையில், அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது என்றும்  தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் தினகரன் இணையும் காலம் வரும் என்று  ஆதீனம் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவோடு தினகரன் இணைவார் என ஆதீனம் கூறிய நிலையில் அமமுக துணைபொதுச்செயலாளர்  தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால்,மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாவது,அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்க விரும்புகிறேன் என்று எச்சரித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்